பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

நபிகள் நாயகம்

வளர்ப்பது நல்லது. நாயகம் அவர்களின் இந்த மூன்று கல்விக் கட்டளைகளை இந்த நல்ல நாளில் தங்களுக்கு நினைப்பூட்டுவதோடு, என் சொற்பொழிவை நிறுத்திக் கொள்கிறேன். அப்பொழுதுதான் இந்த விழாவை நடத்தியதில் ஒரு குறிக்கோள் இருக்கும். நான் மனமார இந்தப் பிள்ளைகளை வாழ்த்துகிறேன். அவர்கள் வெற்றி பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன். அம்மாதிரியான நல்ல பணிகள் இங்கு மட்டுமல்லாமல், சுற்றியுள்ள ஊர்களிலும் நடை பெற வேண்டுமென்று பெருமக்களாகிய நீங்களும் ஆசைப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.


16. முடிவுரை

அன்பர்களே! மேலும் உங்களுடைய அருமையான காலத்தை நான் வீணாக்க விரும்பவில்லை. பலப்பல பேசினேன். கேட்பதைக் கேட்டீர்கள். சிந்திப்பதைச் சிந்தித்து, அல்லன தள்ளி, நல்லன கொண்டு, நாட்டிற்கும், மொழிக்கும், மக்களுக்கும், சமூகத்திற்கும், சமயத்திற்கும் செய்ய வேண்டிய தொண்டுகளைச் செய்து, நீங்கள் சிறப்பெய்தி வாழ வேண்டுமென்று வாழ்த்துவதோடு எனது சொற்பொழிவை முடிக்கிறேன்.

வணக்கம்