பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
மாண்புமிகு ஜஸ்டிஸ் M. M. இஸ்மாயில் அவர்கள்

மதிப்புரை

திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் சாதி, சமய பேதமின்றி தமிழர்கள் அனைவருடைய அன்புக்கும், மதிப்புக்கும், மரியாதைக்கும் பாத்திரமானவர்கள். அவர்களுடைய பகுத்தறிவுப் பற்று இஸ்லாத்திடத்திலும், அதன் திருத்தூதரான முஹம்மது நபி அவர்களிடத்திலும் உண்மையான ஈடுபாட்டை உண்டாக்கிற்று. சுமார் 50 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் முஹம்மது நபி அவர்களுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக நடக்கும் 'மீலாது' விழாக்களில் பெருமளவு அவர்கள் பங்கு கொண்டு நபிகள் நாயகமவர்களுடைய வாழ்க்கையைப் பற்றியும் போதனைகளைப் புற்றியும் விரிவாகப் பேசி வருகிறார்கள். 'அகில இந்திய மீலாது விழா' என்று அண்மையில் கும்பகோணத்தில் நடந்த விழா ஒன்றில் அவர்கள் பேசிய பேச்சு, இப்புத்தக வடிவில் வெளியிடப்படுகிறது.

நபிகள் நாயகம் அவர்களுடைய வரலாறு, அவர்கள் செய்த செயற்கருஞ் செயல்கள், அவர்கள் உணர்த்திய சகோதரத்துவம், அவர்களுடைய அருங்குணங்கள், அவர்கள் கையாண்டு போதித்த சிக்கனம், பிறருடைய குற்றங்களை மன்னிக்கும் கருணை உள்ளம், அவர்கள் நபித்துவம் பெற்றது, அவர்கள் இறைவனிடமிருந்து பெற்று உலகுக்கு வழங்கிய திருக்குர்-ஆன், நபிகள் நாயகமவர்கள் உலகிலே நிலை நிறுத்திய சீர்திருத்தங்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையின் பல துறைகளிலே காட்டிய பெருந்தன்மை, உணர்த்திய குறிக்கோள்கள் ஆகியவற்றோடு இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவங்கள், அதன் ஐம்பெருங் கடமைகள்,