பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90



3. யூதர்கள்: மதீனாவில் இருந்த யூதர்களில், மூன்று கோத்திரத்தினர் மட்டுமே செல்வாக்குள்ளவர்களாக இருந்தனர். அவர்கள் 1. பனூ கைனுகா 2. பனூ நுலைர் 3. பனூ குறைலா இம்முன்று கோத்திரத்தினரும் மதீனாவின் சுற்றுப்புறங்களில் பெரிய பெரிய உறுதியான கோட்டைகளைக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

பெருமானார் அவர்களிடத்தில், யூதர்களுக்கும் பகைமை இருந்து வந்தது. அதற்கு முக்கியக் காரணம் : முதலாவது, மதீனாவாசிகள் முஸ்லிமானது. இரண்டாவது : யூதர்களின் பகைவர்களான ஒளஸ், கஸ்ரஜ் குடும்பத்தாரிடையே ஓயாமல் சச்சரவு நிகழ்ந்து, நலிந்து போயிருந்தார்கள். அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டு விடாதபடி, யூதர்கள் முயன்று வந்தார்கள்.

பெருமானார் அவர்கள் மதீனா வந்த பின்னர், முஸ்லிம்களான ஒளஸ், கஸ்ரஜ் கோத்திரத்தினரும் மிகுந்த ஒற்றுமையாகி, பெருமானார் அவர்களுக்கு உண்மை ஊழியர்களானது யூதர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. ஆனால்,அந்த வருத்தத்தையோ, விரோதத்தையோ அவர்கள் வெளியே காட்டிக் கொள்ளாமல், பெருமானார் அவர்களுடன் சமாதானமாக இருந்து முஸ்லிம்களைத் தாக்குவதற்குச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தனர்.


70. ஒத்துழைப்பும் நட்புறவும்

விரோதிகளுக்கு மத்தியில் முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதால், உள்நாட்டில் சமாதானத்தை நிலை நிறுத்தவும், குறைஷிகள் மற்றும் அயல் நாட்டினர் மதீனாவைக் கைப்பற்றாமல் பாதுகாக்கவும் வேண்டிய பொறுப்பு பெருமானார் அவர்களுக்கு இருந்தது.

மிகுந்த தீர்க்க தரிசனத்தோடும் மதிநுட்பத்தோடும் பெருமானார் அவர்கள் மதீனாவில் உள்ள எல்லாப் பிரிவினரையும் ஓர் உடன்படிக்கையின் மூலம் கட்டுப்பாடு செய்தார்கள். அதன் சுருக்கம்:

அருளாளனும் அன்புடையோனுமாகிய ஆண்டவன் திருப்பெயரை முன்னிட்டு, முஹம்மது நபி (ஸல்) அவர்களால்,