பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100


அந்த வேண்டுதலில், பெருமானார் அவர்கள் தங்களையே மறந்து இருந்ததோடு, மேலாடை கீழே விழுந்த போதிலும் அதை அறிய மாட்டார்கள்.

"எல்லாம் வல்ல இறைவா! மனம் நொந்தவர்களுக்கு நீ உதவி செய். இந்தக் குறைந்த எண்ணிக்கையுடையவர்கள் எதிரிகளால் அழிக்கப் படுவார்களேயானால், தூய்மையான உள்ளத்துடன் உன்னை வணங்க ஒருவருமே இருக்க மாட்டார்கள்” என வேண்டினார்கள்.

இவ்வாறு பெருமானார் அவர்கள் தங்களை மறந்திருக்கும் நிலைமையில், அபூபக்கர் அவர்கள், “நாயகமே! ஆண்டவன் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றுவான்” என்று கூறிய போது, “எதிரிகள் தோற்கடிக்கப் பட்டு ஓடி விடுவார்கள்” என்ற சொற்கள், பெருமானார் அவர்களின் திருவாக்கிலிருந்து ஒலித்தன.

இது முஸ்லிம்களின் வெற்றிக்கு, ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது.

இச்சமயம், குறைஷிகளின் படையானது மிக அருகில் நெருங்கி விட்டது

முஸ்லிம்கள் முன்னேறக்கூடாது என்றும், தங்களுடைய அம்புகளைக் கொண்டே எதிரிகளைத் தடுக்க வேண்டும் என்றும் கட்டளை இடப்பட்டிருந்தனர்.

போர் தொடங்கியது.


78. எதிரிகளின் வீழ்ச்சி

குறைஷிகளின் படைத்தலைவன் உத்பாவும், அபூஜஹீலும், சண்டையில் வீழ்ச்சியடைந்தனர். அதனால் குறைஷிகள் மனம் கலங்கி, அணியில் குழப்பம் மேலிட்டு, நிலை பெயர்ந்து தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் கீழே போட்டு விட்டு ஓடி விட்டனர்.

அவர்களுடைய ஆயுதங்களை எல்லாம் முஸ்லிம்கள் கைப்பற்றிக் கொண்டார்கள்.

போரின் முடிவில் பார்த்தபோது, முஸ்லிம்களிடையே பதினான்கு