பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102


 ஆனால் உமர் அவர்கள், “இஸ்லாத்தைப் பற்றிய அளவில், நண்பன், பகைவன், அந்நியன், நெருங்கியவன், உறவினன் என்ற வேறுபாட்டுக்கு இடமில்லை. அதனால் கைதிகள் எல்லோரையும் கொன்று விட வேண்டும்; ஒவ்வொருவரும் அவரவர்களுடைய நெருங்கிய உறவினரைத் தங்கள் கையாலேயே வெட்ட வேண்டும்” என்று சொன்னார்கள்.

இறுதியில், அபூபக்கர் அவர்களின் கருத்துப்படியே, கைதிகளிடமிருந்து தலைக்கு நாலாயிரம் நாணயம் வீதம் வாங்கிக் கொண்டு அவர்கள் விடப்பட்டனர்.

எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் ஒவ்வொருவரும் பத்துப் பிள்ளைகளுக்கு எழுதக் கற்றுக் கொடுத்தால், விட்டு விடுவதாக உத்தரவிட்டார்கள்.

அவ்வாறே சிலர் கல்வி போதித்தும் விடுதலையானார்கள்.


79. மீண்டும் தாக்க வருதல்

இஸ்லாத்துக்குக் கொடிய விரோதிகளாக இருந்த வீரர்கள் பலருடன், சண்டையில் உத்பாவும், அபூஜஹிலும் மாண்டுவிட்டனர்.

அதன்பின் குறைஷிகள் அபூஸூப்யானைத் தலைவராக்கிக் கொண்டனர்.

அவர் தலைவரானதும், பத்ருப் போரில் இறந்து போன குறைஷிகளின் இரத்தத்துக்குப் பழி வாங்க வேண்டியது அவருடைய கடமை எனக் கருதினார். இருநூறு ஒட்டகப் படையுடன் மதீனாவுக்கு வந்தார். முஸ்லிம்களுக்கு விரோதமான யூதர்கள் தமக்கு உதவுவார்கள் எனக் கருதி, அந்தத் தலைவரிடம் சென்றார். அவரும் உதவி புரிவதாக வாக்களித்து, மதீனாவின் அந்தரங்கக் குறைகளை எடுத்துக் கூறினார். உடனே அபூஸூப்யான், மதீனாவின் அருகில் உள்ள ஓர் இடத்தைத் தாக்கி, சில வீடுகளையும் தீக்கிரையாக்கியதோடு, அன்சாரிகளில் ஒருவரையும் கொன்று விட்டார். தம்முடைய சபதம் நிறைவேறுவதற்கு இதுவே போதுமானது என்று எண்ணிக் கொண்டார். முஸ்லிம்கள் விஷயம்