பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103



அறிந்ததும் அவரைப் பின் தொடர்ந்தனர். அதை அறிந்ததும் அபூஸூப்யான் ஒடத் தொடங்கி விட்டார்.

ஒடிய வேகத்தில், உணவுக்காகக் கொண்டு வந்திருந்த மாவு மூட்டைகளை விட்டு விட்டு ஓடினார். அவற்றை முஸ்லிம்கள் கைப்பற்றிக் கொண்டார்கள்.

அந்த மாவுக்கு அரபியில் 'ஸ்வீக்' என்று பெயர். அதனால் இச்சண்டைக்கு 'ஸ்வீக்' சண்டை என்று பெயர் உண்டாயிற்று.


80. புதல்வியர் திருமணம்

இந்த வருடத்தில், பெருமானார் அவர்களின் குமாரத்தி பாத்திமா நாச்சியார் அவர்கள், அலீ ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்கள்.

பெருமானார் அவர்கள் தங்கள் மகளுக்கு ஸ்திரீதனமாக தோல் படுக்கை, தோல் கூசா(கூஜா), இரண்டு திரிகைகள், இரண்டு மண் பானைகள் ஆகியவற்றையே அளித்தார்கள்.

இதே வருடத்தில்தான் ரமலானுடைய நோன்பு கடமையாக்கப்பட்டது. நோன்பு முடிந்த மறுநாள் 'ஈதுல் ஃபித்ரு என்னும் பெருநாளாகக் கொண்டாடப் பெற்றது, தவிரவும் ஃபித்ரா, (ஸதக்கா) தர்மங்கள் செய்யும் முக்கிய காலமாகவும் கடைப் பிடிக்கப் பெற்றது அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தியதும் இந்த வருடத்திலேதான் என்பது குறிப்பிடத்தக்கது (குத்பாச் சொற்பொழிவு).


81. பகைவர்கள் மீண்டும் தயாராகுதல்

அரபு நாட்டில் ஒரு கொலையின் காரணமாக, பல ஆண்டுகள் வரை நீடித்து நிற்கக் கூடிய சண்டை தோன்றிவிடும். அதனால் எத்தனையோ குடும்பங்கள் நாசமாகும்.

தோல்வியுற்றவர் பழி வாங்குதைத் தம் முக்கிய கடமையாகக் கருதுவார். பழி வாங்காமல் அவர் உயிர் வாழ்வது அரிது.

முன்னர், இப்னுல் ஹல்ரமி என்பவர் கொலையுண்ட போது