பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

129



99. யூதர்கள் செய்த தீங்குகள்

பெருமானார் அவர்கள் மதீனாவுக்கு வருமுன்னர், யூதர்களின் செல்வாக்கு அங்கே அதிகமாயிருந்தது.

யூதர்களில் பனூ கைனுகா, பனூ நலிர், பனூ குறைலா என்னும் மூன்று கூட்டத்தினரே முக்கியமானவர்கள். அவர்களே நிலப் பிரபுகளாகவும், செல்வந்தர்களாகவும் இருந்தார்கள். வியாபாரமும், கைத்தொழிலும் அவர்களிடமே இருந்தன.

யூதர்களுள் பனூ கைனுகா கூட்டத்தார் நகை செய்யும் தொழிலை மேற்கொண்டிருந்தனர். வீரத்திலும் அவர்கள் சிறந்து விளங்கினார்கள். அவர்களிடம் ஏராளமான யுத்தத் தளவாடங்கள் இருந்தன.

யூதர்களுக்குச் செல்வம், கல்வி, மதம் ஆகியவற்றிலும் செல்வாக்கு இருந்தது. அதனால் அவர்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

மதீனா வாசிகளில் மற்ற இரு பிரிவினரான ஔஸ், கஸ்ரஜ் என்னும் கூட்டத்தினர் கல்வி அறிவு இல்லாதவர்களாகவும், விக்கிரக வணக்கத்தில் ஈடுபட்டவர்களாகவும் இருந்தனர். அவர்களுக்குள் அடிக்கடி உண்டான சச்சரவு காரணமாக நலிவடைந்து, யூதர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தனர்.

யூதர்களிடம் அவர்கள் கடன் வாங்கிக் கொள்வார்கள். மதீனா வாசிகளில் பெரும்பான்மையோர் யூதர்களுக்குக் கடன் பட்டவர்களாகவே இருந்தனர்.

யூதர்கள் கடன் கொடுத்தால், கடுமையான நிபந்தனைகளை விதிப்பார்கள். கடனுக்கு ஆதாரமாகப் பெண்களையும் பிள்ளைகளையும் ஈடு வைக்கும்படிச் சொல்லுவார்கள். செல்வச் செருக்கினால் விபச்சாரம் முதலிய தீய செய்கைகள் யூதர்களிடம் மிகுதியாயிருந்தன. அவர்களைக் கண்டிப்பார் எவரும் இல்லை.

நிலைமை இவ்வாறு இருக்கும் போது, பெருமானார் அவர்கள் மதீனாவுக்கு வந்தார்கள். ஒளஸ், கஸ்ரஜ் என்னும் இரு கூட்டத்தினர்

10

10