பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144



அதற்கு அவர்கள், “முஹம்மது யார் என்பதே எங்களுக்குத் தெரியாது. உடன்படிக்கை இன்னது என்பதும், எங்களுக்குத் தெரியாது” என்று கூறி விட்டார்கள்.

மேலும், அக்கூட்டத்தார் படைகளைத் திரட்டிக் கொண்டு சண்டைக்குத் தயாராக இருந்ததைக் கண்டு, அவர்களைக் கண்டித்தார்கள்.

அவர்கள் இருவரும் திரும்பி வந்து, பெருமானாரிடம் மட்டும் விவரத்தைத் தெரிவித்தார்கள்.

இந்தச் செய்தி படையிலுள்ளவர்களுக்குத் தெரிந்தால், மனம் தளர்ந்து விடக் கூடும் என்று கருதி பெருமானார் அவர்கள் எவரிடமும் கூறவில்லை.


108. தளராத உறுதி

தங்களுடைய படைகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, குறைஷிகள் மதீனா நகரத்தின் மூன்று புறங்களைத் தாக்கினார்கள்.

ஆரம்பத்தில், முஸ்லிம் படையில் முனாபிக்குகளும் சேர்ந்திருந்தார்கள். அப்பொழுது குளிர் காலமாயிருந்தது. உணவும் போதிய அளவு கிடைக்கவில்லை. தவிர, இரவில் கண் விழித்திருக்க வேண்டியதிருந்தது. மேலும், பகைவர்களின் படையோ எண்ணிக்கையில் பன்மடங்கு அதிகமாயிருப்பதையும் கண்டு, முனாபிக்குகள் தப்பித்துச் செல்ல வழி பார்த்தார்கள். தங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்று இருக்கின்றன என்றும் “அவற்றைப் பாதுகாக்கத் தாங்கள் போக வேண்டியது அவசியம்” என்றும் காரணம் கூறி, பின் வாங்கிச் செல்லத் தொடங்கினார்கள்.

ஆனால், பகைவர்களின் மிகுந்த படைபலத்தைக் கண்டு, உண்மையான முஸ்லிம்களுக்கு ஊக்கம் அதிகரித்தது.

முற்றுகை கடுமையாக இருந்தது. அப்போது சில வேளைகளில் நபி பெருமானாரும், தோழர்களும் தொடர்ந்து மூன்று வேளையும் பட்டினி கிடக்க நேரிட்டது.