பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148



“அது இயலாத காரியம்” எனப் பதில் அளித்தார் அம்ரு.

“சண்டையிலிருந்து திரும்பிப் போய்விடும்” என்றார் அலி அவர்கள்.

“குறைஷிப் பெண்களிடமிருந்து ஏளனச் சொற்களைத் கேட்க முடியாது” என்று பதில் கூறினார் அம்ரு.

“என்னுடன் சண்டை செய்ய வாரும்” என்றார் அலி அவர்கள்.

அதைக் கேட்டதும் அம்ரு சிரித்துக் கொண்டே, “இந்த வானத்தின் கீழ், இத்தகைய கோரிக்கையை என்னிடம் எவரேனும் விடுப்பார்கள் என்று நான் எண்ணவே இல்லை” என்றார்.

ஹலரத் அலிக்குக் குதிரை கிடையாததால், தாம் மட்டும் குதிரையின் மீது இருந்து கொண்டு அவர்களுடன் சண்டையிடுவது தம் கெளரவத்துக்கு இழுக்கு என்று எண்ணிக் குதிரையை விட்டுக் கீழே இறங்கி, வாளினால் முதலாவது குதிரையின் காலை வெட்டினார் அம்ரு.

அதன் பின், அவர்களுடைய பெயர் என்னவென்று கேட்டார்.

அலி அவர்கள், தங்கள் பெயரைக் கூறினார்கள். “உம்முடன் சண்டை செய்ய எனக்கு விருப்பம் இல்லை” என்றார் அம்ரு.

“நான் உம்மோடு சண்டை செய்ய விரும்புகிறேன்” என்றார்கள் அலி.

அதைக் கேட்டதும் அம்ருவுக்குக் கோபம் தாளவில்லை. வாளை உருவி, அவர்களுக்கு நேராக வீசினார்.

தங்களுடைய கேடயத்தினால், அலி அவர்கள் அதைத் தடுத்தார்கள். ஆனால், அவ்வாள் கேடயத்தையும் உடைத்துக்கொண்டு அவர்கள் நெற்றியில் பட்டது. அதனால் சிறு காயம் உண்டாயிற்று. அந்தத் தாக்குதலை அடுத்து, தங்கள் வாளை அம்ரு மீது வீசவே, அது அவருடைய உடலில் கீழே இறங்கிவிட்டது. உடனே அலி அவர்கள் “அல்லாஹூ