பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170



முஸ்லிம்களுக்கு “இத்தகைய நன்மைகள் இருந்தும், இவ்வருடம் ஹஜ் செய்யாமல் திரும்பிப் போவதற்குப் பெருமானார் அவர்கள் ஏன் சம்மதித்தார்கள்?" என்பது ஒரு கேள்வி.

குறைஷிகளுடன் போர் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதே பெருமானார் அவர்களின் முக்கிய நோக்கம்.

குறைஷிகளுடன் சமாதானம் உண்டானால்தான், அவர்கள் முஸ்லிம்களுடன் கலந்து பழகி, இஸ்லாத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்வதற்குப் போதிய வாய்ப்பு உண்டாகும்.

ஆதலால், எவ்வகையிலாவது, குறைஷிகளுடன் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கருதி, பெருமானார் அவர்கள் மேற்படி நிபந்தனைகளை ஒப்புக் கொண்டு, குறைஷிகளுடன் சமாதானத்தை ஏற்படுத்தினார்கள்.

உடன்படிக்கையின் நிபந்தனைகளை உமர் அவர்களும் மற்றும் சிலரும் அறிந்ததும் மிக வருந்தினார்கள். ஆனால் ஹலரத் அபூபக்கர் அவர்களின் பொருத்தமான விளக்கம் எவ்வாறு இம்மனவருத்தத்தைப் போக்கிற்று என்பதைப் பின்னர் பார்ப்போம்.

இதுவும் இஸ்லாம் வெகு விரைவாகப் பரவி, வளர்ச்சி பெறத் துணை செய்தது.

இந்த உடன்படிக்கை, இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான திருப்பமாகும்.


128. மத்தியில் உண்டான இடையூறு

உடன்படிக்கையை எழுதிக் கொண்டிருக்கும் போது, சிறு சலசலப்பு உண்டாயிற்று.

குறைஷிகளின் தூதர் ஸூஹைலும், பெருமானார் அவர்களும் நிபந்தனைகளை விவாதித்து, உடன்படிக்கை எழுதிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது, ஸூஹைலின் குமாரர் அபூஜந்தல் என்பவர் இஸ்லாத்தைத் தழுவி இருந்ததால், மக்கா குறைஷிகள் அவரை