பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178



135. மன்னரின் மட்டற்ற மகிழ்ச்சி

“நபி என்று தம்மைக் கூறிக் கொள்பவரின் வரலாற்றை, அபூ ஸூப்யானிடம் நான் விசாரிக்கப் போகிறேன். என் கேள்விகளுக்கு அவர் ஏதாவது பொய் சொன்னால், உடனே அதை என்னிடம் தெரிவிக்க வேண்டும்” என்று ரோமாபுரி அரசர், சபையில் அறிவித்தார்.

பெருமானார் அவர்களிடம் கடுமையான பகைமை கொண்டு, அவர்களைக் கேவலப்படுத்துவதிலேயே கருத்தாக இருந்தவர் அபூ ஸூப்யான். ஆயினும், அரசரின் கேள்விகளுக்குப் பெருமானார் அவர்களைப் பற்றிய உண்மைகளைக் கூறியது, பெருமானார் அவர்களுடைய பெருமையை மேலும் உயர்த்தியது. உண்மைக்கு அழிவில்லை; உண்மை எப்பொழுதும் வெற்றி பெறும் என்பதை அரசர் உள்பட அனைவரும் உணர்ந்தனர்.

அரசர் கேட்ட கேள்விகளுக்கு அபூ ஸூப்யான் பதில் அளித்தார்.

அவற்றைச் சீர் தூக்கிப் பார்த்த அரசர், அபூ ஸூப்யானிடமே அதைத் தெளிவுபடுத்துகிறார்.

“நபியின் குடும்பக் கெளரவத்தைப் பற்றி உம்மிடம் கேட்டேன்.

அரபு நாட்டில் மிகவும் கெளரவமும் பெருமையும் மிக்க குடும்பத்தில் அவர் தோன்றியதாகக் கூறினீர்.

தீர்க்கதரிசிகள் எல்லோருமே மேன்மையான குடும்பத்திலேயே தோன்றியுள்ளனர்.

முன்னர், அந்தக் குடும்பத்தில் ஒருவரும் தம்மை நபி என்று கூறிக் கொள்ளவில்லை என்பதை நீரே ஒப்புக் கொள்கிறீர்.

அவ்வாறு, யாரேனும் கூறியிருந்தால், அதைப் பின்பற்றியே இவரும் கூறி இருப்பார் என்று நினைக்கலாம்.

அவருடைய குடும்பத்தில் ஒருவரும் அதற்கு முன் அரசராக இருந்ததில்லை என்று சொல்லுகின்றீர்.