பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224



உங்களுககுள் ஒற்றுமையை உண்டாக்கினான். நீங்கள் வறுமையில் வாடிக் கொண்டிருந்தீர்கள். ஆண்டவன் என் மூலமாக, உங்களைச் செல்வர்களாக ஆக்கினான். இவை எல்லாம் உண்மை அல்லவா ?” என்று கேட்டார்கள்.

பெருமானார் அவர்கள் கூறிய சொல்லின் முடிவிலும், அன்ஸாரிகள், "ஆண்டவனுடைய உதவியும் , அவனுடைய ரஸூலுடைய உதவியும் எல்லாவற்றையும் மேன்மையுறச் செய்து விட்டன" என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

பின்னர், பெருமானார் அவர்கள் அன்ஸாரிகளிடம், “வேறு விதமான விடை கூட எனக்குச் சொல்லக் கூடும்” என்றார்கள்.

அன்ஸாரிகள் "யாரஸூலல்லாஹ்! நாங்கள் என்ன விடை கூற முடியும்! என்றார்கள்.

அப்பொழுது பெருமானார்கள் அவர்கள், "நீங்கள் விரும்பினால் இப்படியும் சொல்லலாம்: 'முஹம்மதே! உங்களுடைய மக்கள் உங்கள் மீது நம்பிக்கையற்று இருக்கும் போது, நீங்கள் எங்களிடம் வந்தீர்கள். நாங்கள் உங்களை உண்மையானவர்களாக ஏற்றுக் கொண்டோம் . உங்களுக்கு ஆதரவு இல்லாத போது நீங்கள் தனியாக வந்தீர்கள். நாங்கள் உதவி புரிநது ஆதரித்தோம்'. இவ்வாறாக நீங்கள் கூறினால் 'நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான்' என்று நான் சொல்லிக் கொண்டிருப்பேன்.

"அன்ஸாரிகளே! குறைஷிகள் புதிதாக முஸ்லிம்களாகி இருக்கிறார்கள்; இப்பொழுது அவர்கள் துன்புற்றுக் கொண்டிருக்கிறார்கள். சண்டையில் கிடைத்த பொருட்களால் அவர்களைத் தேற்றலாம் என்று விரும்பினேன். அன்ஸாரிகளே! மற்றவர்கள் ஒட்டகங்களையும், ஆடுகளையும் தங்கள் வீடுகளுக்குக் கொண்டு போவார்கள். நீங்கள் முஹம்மதை உங்கள் வீட்டுக்குக் கொண்டு போவதைப் பிரியப்படவில்லையா? என்னுடைய ஆத்மா யார் கையில் இருக்கிறதோ, அவன் பேரில் சத்தியமாக, நிச்சயமாக, நான் உங்களைக் கைவிட மாட்டேன் மற்றவர்கள் எல்லோரும் காட்டின் ஒரமாய்ப் போய்க் கொண்டிருக்கையில் அன்ஸாரிகள் மட்டும் கணவாய் வழியாகப் போனால், நான் அன்ஸாரிகளுடன்தான்