பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226



அதற்குப் பெருமானார் அவர்கள், “என்னுடைய பங்கிலும், அப்துல் முத்தலிப் வம்சத்தார் பங்கிலும் எத்தனை கைதிகள் வந்திருக்கலாமோ, அவர்கள் அனைவரையும் உங்களிடமே திருப்பி அனுப்பி விடுகிறேன். ஆனால் கைதிகள் எல்லோரையும் விடுவிக்க வேண்டும் என்றால், பகல் தொழுகைக்குப் பின், மக்கள் கூட்டத்தில், உங்கள் கோரிக்கையைத் தெரிவித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அவ்வாறே, தொழுகைக்குப் பின், அக்குழுவினர் வந்து, தங்கள் கைதிகளை விடுவிக்கும்படி முஸ்லிம்களிடம் வேண்டிக் கொண்டார்கள். அவ்வேண்டுகோளைக் கேட்டதும் பெருமானார் அவர்கள், “அப்துல் முத்தலிப் அவர்களின் சந்ததியாருக்குக் (பெருமானார் வசம்) கிடைத்த கைதிகளை நான் உங்களுக்குக் கொடுத்து விட்டேன்” என்று கூறினார்கள்.

உடனே முஸ்லிம்கள் எல்லோரும் "எங்கள் பங்குக்கு கிடைத்த கைதிகளையும் நாங்கள் பெருமானார் அவர்களுக்குக் கொடுத்தோம்” என்று சொன்னார்கள்.

இவ்வாறு ஆறாயிரம் கைதிகளும் விடுவிக்கப்பட்டு விட்டனர்.

பெருமானார் அவர்கள் அங்கிருந்து மதீனாவுக்குத் திரும்பினார்கள்.


174. “ஆண்டவனைத் தொழுது வேண்டிக் கொள்ளுங்கள்”

ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு மரியா கிப்தியா அவர்களிடமிருந்து பெருமானார் அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

அக்குழந்தைக்கு இப்ராஹிம் என்ற பெயர் சூட்டினார்கள். அந்தக் குழந்தையிடம் பெருமானார் அவர்கள் மிகுந்த பிரியமாக இருந்தார்கள். ஒரு வருடம் வரை தான் அக்குழந்தை உயிருடன் இருந்தது.

அந்தக் குழந்தை உயிர் நீத்த தினத்தில், சூரிய கிரஹணம் உண்டாயிற்று. சிறப்பு மிக்க ஒருவனுடைய மரணத்தின்