பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240



உதாரிது எழுந்து, “புகழனைத்தும் இறைவனுக்கே! அவனே புகழுக்கு உரியவன். அவனுடைய கருணையினாலேயே, எங்களை அரசர்களாக்கித் திரண்ட செல்வங்களுக்கு அதிபதிகளாக்கினான். கீழ்த்தேசத்தில் இருக்கும் எல்லாக் கூட்டத்தார்களிலும் எங்களை வலிமையிலும் எண்ணிக்கையிலும் அதிகமாக்கினான். இன்று எங்களுக்குச் சமமாக யார் இருக்கின்றனர்? பதவியில் எங்களுக்கு இணையாக யாராவது இருப்பார்களேயானால், அவர்கள் தங்கள் பெருமையை எடுத்துக் கூறலாம்.” என்று கூறி அமர்ந்தார்.

அதற்குப் பெருமானார் அவர்கள் தாபிதுப்னு கைஸ் அவர்களை நோக்கி, “எழுந்து அந்த மனிதரின் உரைக்குப் பதில் கூறும்” என்று சொன்னார்கள்.

தாபித் எழுந்து, "வானங்களையும் பூமியையும் படைத்த ஆண்டவனுக்கே புகழ் எல்லாம் உரித்தானது. அவன் நமக்கு அரசை அருளினான். தன் படைப்பில் சிறந்தவர்களைத் தேர்ந்து, தன் தூதராக்கினான். அவர்கள் உயர்ந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரிலும் அவர்கள் சத்திய வாக்கும், ஒழுக்கமும் உள்ளவர்கள். அதனாலேயே ஆண்டவன் தன்னுடைய வேதத்தை அவர்களிடம் அருளினான். அவர்கள் மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைத்தார்கள். அப்போது எல்லோருக்கும் முதன்மையாய் முஹாஜிர்களும், அடுத்தபடியாக அன்ஸாரிகளாகிய நாங்களும் அவர்களின் அழைப்பை ஏற்றுக் கொண்டோம். நாங்கள் ஆண்டவனுடைய வழியில் உதவியவர்களாயும், நபித்துவத்திற்கு அமைச்சர்களாயும் இருக்கின்றோம்’ என்று கூறி முடித்தார்கள்.

அதன்பின், தமீம் கூட்டத்தாரைச் சேர்ந்த ஸிப்ரிகான் என்ற கவிஞர் தம் கருத்தைக் கவிதையில் பாடினார்.

அவருக்கு எதிராக, முஸ்லிம் ஹஸ்ஸான் கவிதை பாடினார்.

வாக்கு வன்மையிலும், கவி பாடுவதிலும் பெருமானார் அவர்களிடம் இருப்பவர்களே மேலானவர்கள் என்று ஒப்புக் கொண்டனர். ஆடம்பரமும் அகம்பாவமும் ஒடுங்கியது. அக்கூட்டத்தார் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவினார்கள். அதன்