பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8



ஆசை காட்டி, மனதைத் திருப்ப முயன்றார். ஆனால், இறுதியில் மனமாற்றத்தோடு திரும்பினார். அதனால், குறைஷிகளின் ஏளனத்துக்கு ஆளானார். முன் ஒரு சமயம் பெருமானாருக்குத் திராட்சைப் பழங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

உத்மான் இப்னு அப்பான்-உமைய்யாக் கோத்திரத்தைச் சேர்ந்த ஹல்ரத் உத்மான், பெருமானாரை விட ஆறுவயது இளையவர். பெருஞ் செல்வந்தர். உமறுல் பாரூக் (ரலி) அவர்களுக்குப் பின் கலிபாவானார்கள். நபிகள் பெருமானாரின் திருமகளார் இருவரைத் திருமணம் செய்தவர்கள்.

உத்மான்-வல்ஹாவின் மகன். அவர் மாண்டதும், இவர் கொடி பிடித்தார். ஹம்ஸா வாளால் வீசியதும், இவரும் வீழ்ந்தார்.

உமர்-அதீ கிளையைச் சேர்ந்த கத்தாபின் மகன். அபூஜஹ்லின் பரிசு அறிவிப்பை ஏற்று, நாயகம் அவர்களைக் கொலை செய்ய, உருவிய வாளுடன் சென்றார். வழியில் தம் சகோதரியின் வீட்டுக்குச் சென்று, மனமாற்றம் பெற்றார். பின்னர், பெருமானார் முன்னிலையில் இஸ்லாத்தைத் தழுவினார். அது முதல், இஸ்லாமிய வரலாற்றில் புதுத் திருப்பம் ஏற்படலாயிற்று.

உம்மு அமாரத்-இஸ்லாத்தைத் தழுவிய அன்ஸாரிகளில் ஒருவர். இவரும், இவருடைய கணவரும், இரண்டு ஆண் மக்களும் உஹத், கைபர், ஹுனைன் முதலிய போர்களில் கலந்து வீரப் போர் புரிந்தனர். போரில் காயம் அடைந்தவர்களுக்குத் தண்ணீர் வழங்கி, காயத்துக்குச் சாம்பல் தடவினர். நபிகளாரின் பாராட்டுப் பெற்றவர். இவருடைய குடும்பத்தார் அனைவரும் போரில் வீர மரணம் எய்தினர்.

உம்மு ஹகீம்-இவர் இஸ்லாத்தின் விரோதியாயிருந்த இக்ரிமாவின் மனைவி. தப்பி ஓடிய கணவரை அழைத்து வந்து, பெருமானாரின் மன்னிப்பைப் பெற்றவர்.

உர்வத் இப்னு மஸ்வூத்-இவர் அபூஸூப்யானின் மருகர். தாயிபிலுள்ள தகீப்களின் தலைவர். குறைஷிகளின் சார்பாகப் பெருமானார் அவர்களிடம் தூது போய், அவர்களுக்கு உள்ள