பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246



அவர்களுடன் லாத்தை உடைப்பதற்காக அபூ ஸுப்யான், அல் முசீரா (ரலி) ஆகிய இருவரையும் பெருமானார் அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

லாத்தை உடைக்கப் போகும் போது, தாயிபிலுள்ள பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து, தலைவிரி கோலமாய் நின்று அழுது கொண்டிருந்தார்கள்.

தகீப் கூட்டத்தார் அனைவரும் இரண்டு வருடத்துக்குள் இஸ்லாத்தில் சேர்ந்து விட்டார்கள்.


191. பாதுகாப்பு வரி செலுத்துதல்

நஜ்ரான் என்னும் மாநிலம், ஏமன் தேசப் பகுதியில் உள்ளது. அது மக்காவிலிருந்து 175 மைல் தொலைவாகும்.

கிறிஸ்துவர்கள் அங்கே மிகுதியாயிருந்தனர். அங்கே ஒரு பெரிய கோவில் இருந்தது. அதை அந்த நகர மக்கள் கஃபாவுக்குச் சமானமாகக் கருதினார்கள்.

பெருமானார் அவர்கள், அந்த மக்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிப் போதனை செய்து கடிதம் அனுப்பினார்கள்.

அக்கடிதம் கிடைத்ததும், கோயிலின் பாதுகாவலரும், மதகுருமார்களும் அடங்கிய அறுபது பேர், ஒரு கூட்டமாகப் பெருமானார் அவர்களிடம் வந்தார்கள். அக்கூட்டத்தாரைப் பள்ளி வாசலில் தங்குமாறு செய்தார்கள்.

அக்கூட்டத்தினர் தங்களுடைய ஐபத்தை பள்ளி வாசலில் ஆரம்பித்தார்கள். முஸ்லிம் தோழர்கள் அதைத் தடுத்தனர். ஆனால், பெருமானார் அவர்கள் ஜபத்தை நடத்திக் கொள்ளும்படி உத்தரவு கொடுத்தார்கள்.

அக்கூட்டத்தினருக்குப் பெருமானார் அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி போதனை செய்தார்கள் ஆனால், அக்கூட்டத்தார் தங்களுடைய புராதன மதத்தைக் கைவிட விரும்பவில்லை.

எனினும், அக்கூட்டத்தார், பாதுகாப்புக்காக ஆண்டு தோறும்