பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

253



முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினை உண்டாக்கக் கருதி முனாபிக்குக் கூட்டத்தினர் வேறு ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள்.

பெருமானார் அவர்கள் தபூக் சண்டைக்குப் புறப்பட்டுச் செல்லும் போது, அக்கூட்டத்தார் பெருமானார் அவர்களிடம் சென்று, புதிய பள்ளிவாசலுக்கு வந்து தொழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள்.

சண்டையிலிருந்து திரும்பி வந்த பின் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டுப் பெருமானார் அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள்.

முஸ்லிம்களுக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடனேயே, அந்தப் பள்ளிவாசல் கட்டப்பட்டிருப்பதாக, ஆண்டவனால் பெருமானார் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

அப்பள்ளிவாசலை எரித்து விடுமாறு பெருமானார் அவர்கள் கட்டளை இட்டார்கள். உடனே அது எரிக்கப்பட்டு விட்டது.

ஹிஜ்ரீ ஒன்பதாவது வருட இறுதியில், அப்துல்லாஹ் இப்னு உபை கடுமையான நோய்க்கு ஆளானான். அந்நோயிலிருந்து பிழைக்கும் நம்பிக்கை அவனுக்கு உண்டாகவில்லை. ஆனால், அவனுடைய மகன் உண்மையான முஸ்லிமாக இருந்தார்.

உபை தன் மகன் மூலமாகப் பெருமானார் அவர்களிடம் இரண்டு கோரிக்கைகளைச் சொல்லி அனுப்பினான்; அவ்வாறே அவர் மகன் வந்து “தம் தந்தை மரணம் அடைந்தபின், பிரேதத்தைப் போர்த்தி அடக்கம் செய்வதற்காகப் பெருமானார் அவர்களின் ஆடை ஒன்றைத் தரவேண்டும். தந்தைக்காகப் பெருமானாரே 'ஜனாஸாத்' தொழுகை நடத்த வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டார்.

தீமைகள் பல புரிந்தவனானாலும், அவனுடைய கோரிக்கையைப் பெருமானார் அவர்கள் மறுக்கவில்லை. அவ்வாறு தொழுகை நடத்துவதற்குப் பெருமானார் அவர்கள் சம்மதித்து, தங்களுடைய சட்டை ஒன்றைக் கொடுத்தார்கள்.

இப்னு உபை மரணம் அடைந்ததும், ஜனாஸாத் தொழுகைக்காகப் பெருமானார் அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது உமறு