பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20



“மனிதன் மேலான காரியங்களுக்காகப் படைக்கப் பட்டிருக்கிறானே தவிர, விளையாட்டுக் காரியங்களில் ஈடுபடுவதற்காகப் படைக்கப்படவில்லை” என்று கூறி மறுத்துவிட்டார்கள்.


4. கல்வி பயிலாமல் அறிவுக் கூர்மை

இளமையிலே அறிவுக் கூர்மையும், சிறந்த ஆராய்ச்சியும் மிளிர்வதற்கான அறிகுறிகள் பெருமானார் அவர்களிடம் நிரம்பக் காணப்பட்டன. எந்தக் கல்விக் கூடத்திலோ அல்லது எந்தத் தனி ஆசிரியரிடத்திலோ பெருமானார் கல்வி பயின்றதில்லை.

இதனாலேயே பெருமானார் அவர்களுக்குக் ‘கல்வி கற்காதவர்’ (உம்மி) என்ற பெயர் உண்டாயிற்று.


5. மழைக்காகப் பிரார்த்தனை

ஒரு சமயம், மக்காவில் கொடிய பஞ்சம் நிலவியது. மக்கள் அனைவரும் துன்புற்றார்கள்.

அதை அறிந்த அபூதாலிப், பெருமானார் அவர்களை ஒரு பரந்த வெளிக்குக் கூட்டிக் கொண்டு போய், மழை பெய்வதற்காகப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அன்புடையோனும் அருளுடையோனுமான எல்லாம் வல்ல ஆண்டவன் சமூகத்திலே, பெருமானார் மழை பொழியப் பிரார்த்தனை செய்தார்கள். அப்பொழுது அவர்களுக்கு வயது பத்து. உடனே மழை பொழிந்தது! பஞ்சம் அகன்றது! நாடு செழிப்படைந்தது.


6. ஆண்டவன் கட்டளை

பெருமானார் அவர்கள் ஹலரத் ஹலிமா அவர்களிடம் வளர்ந்து வரும் பொழுது வயது மூன்று.

ஒருநாள், அன்னை ஹலிமாவின் மக்களைக் காணாமையால், பெருமானார் அவர்கள், “ அருமை அன்னையே என் சகோதர்களைக்