பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37



உட்பட்டிருந்த ஹிஜாஸ் மாகாணத்தை ரோமாபுரியின் ஆட்சிக்கு உட்படுத்திக் கொடுப்பதாகவும், அப்படியாகி விட்டால், தாமே அங்கு அரசப் பிரதிநிதியாக வேண்டும் எனக் கூறி, ரோமாபுரிச் சக்கரவர்த்தியிடம் ஏராளமான செல்வத்தைப் பெற்றுக் கொண்டு, மக்காவுக்கு வந்து, இரகசியமாகப் பல சூழ்ச்சிகள் செய்தார்.

அவருடைய சூழுச்சி வெற்றி பெற்றிருக்குமானால், அரேபியாவில் பெரிய மாறுதல்கள் நிகழ்ந்திருக்கக் கூடும்.

அவருடைய சூழ்ச்சி பெருமானார் அவர்களுக்குத் தெரிய வந்ததும், அவருடைய முயற்சி நிறைவேறாமல் முறியடித்தார்கள்.

அவரோ தோல்வியுற்றதும், சிரியாவுக்குத் தப்பியோடி, அங்கே கொல்லப்பட்டார்.

பெருமானார் அவர்களின் மாபெரும் சாதனையால், அரபியர்கள் அந்நியர்களுக்கு அடிமையாகாமல் காப்பாற்றப்பட்டனர்.

இந் நிகழ்ச்சி அரேபிய வரலாற்றில் முக்கியம் வாய்ந்ததாகும்.


25. பஞ்சத்தின் கொடுமையை அகற்றுதல்

தங்களுடைய குடும்பக் காரியங்களோடு பெருமானார் அவர்கள், தேசத்தின் பொதுக் காரியங்களிலும் சிறப்பாக கவனம் செலுத்தி வரலானார்கள்.

அக்காலத்தில் அரேபியாவில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்களும் பிராணிகளும் உயிர் இழந்தனர்.

பெருமானாரின் இயல்பான கருணை உள்ளத்தாலும், தயாள குணத்தாலும், பஞ்ச காலத்தில், ஏழைகளை மிகுந்த பரிவோடு ஆதரித்து வந்தார்கள்.

பெருமானார் அவர்களின் விருப்பப்படி செய்து கொள்வதற்காக கதீஜாப் பிராட்டியார் அளித்திருந்த செல்வம் அனைத்தையும், பஞ்ச நிவாரணத்திலும், ஏழைகளுக்கு உதவுவதிலும் பயன்படுத்தினார்கள்.

அதனால், பஞ்சத்தின் கொடுமையிலிருந்து மக்கள் மீண்டார்கள்.