பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62



அந்த மூவரும் அத்தோடு நிற்கவில்லை, பெருமானார் அவர்களை ஏளனம் செய்யுமாறு கடை வீதியிலுள்ள மக்களைத் தூண்டி விட்டனர்.

ஊரில் உள்ள வீணர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு வந்து, பெருமானார் அவர்களுக்கு எதிரில் அணி வகுத்து நின்றார்கள்.

பெருமானார் அவர்கள் புறப்பட்டுச் செல்லும் போது, அந்தக் கொடியவர்கள், அவர்களின் பாதங்களில் கற்களை வீசி எறிந்தனர்.

கல் வீச்சினால் காயம் பட்டுக் காலணிகள் இரத்தத்தால் நனைந்தன.

காயத்தால் சோர்வுற்று, அவர்கள் உட்கார முற்படும் போது, அந்தப் படுபாவிகள் உட்கார விடாமல், தோளைப் பிடித்து எழுந்து நிற்குமாறு தூக்கி விடுவார்கள்.

மேலும் நிந்திப்பார்கள்; ஏளனம் செய்வார்கள்; கைகொட்டிச் சிரிப்பார்கள்.


45. “என்னை யாரிடத்தில் ஒப்புவிப்பாய்?”

அறியாமை மிக்க தாயிப் மக்களின் தொல்லைகள் தாளாமல், பெருமானார் அவர்கள் கடைசியாக, அருகிலுள்ள திராட்சைத் தோட்டத்துக்குப் போய் அந்தப் பந்தலுக்கு அடியில் சோர்வோடு அமர்ந்தார்கள்.

தோட்டத்தின் சொந்தக்காரர் முஸ்லிம் அல்லாத ஒருவர்.

பெருமானார் அவர்களின் அந்த நிலையைக் கண்ட அவர் தம்முடைய ஏவலாள் மூலம் ஒரு முந்திரிக் கொத்தைப் பாத்திரத்தில் வைத்துக் கொடுத்து அனுப்பினார்.

களைப்பாறிய பெருமானார் அவர்கள், இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.

“ஆண்டவனே! மனிதர்களின் பார்வையில் நான் கேவலப்படுத்தப் படுவதையும் உன்னிடமே முறையிடுகின்றேன். ஏனெனில், இரக்கம் உள்ளோர் எல்லோரிலும் நீயே மிகவும் இரக்கம் உள்ளவன். நீயே பலவீனர்களைக் காப்பாற்றுகிறவன், என்னையும்