பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72



முன்பு உடன்பாடு நிகழ்ந்த அதே இடத்தில், புதிதாக வந்தவர்கள் ஒரு நள்ளிரவில் கூடினார்கள். அந்த இடத்துக்கு நபி பெருமானாரும் அவர்களின் பெரிய தந்தையான அப்பாஸ் அவர்களும் போயிருந்தனர்.

அப்பாஸ் அவர்கள் அப்பொழுது இஸ்லாத்தில் சேரவில்லை.

அவர்கள் யத்ரிபிலிருந்து வந்தவர்களை நோக்கி, "கஸ்ரஜ் குழுவினர்களே! முஹம்மது அவர்களின் மதிப்பும், கெளரவமும் எங்களிடையே எவ்வளவு உயர்ந்தது என்பது உங்களுக்குத் தெரியும், அவர்களுடைய பகைவர்களுக்கு எதிரில் எங்கள் மார்பைக் கேடயமாகக்கொண்டு அவர்களைப் பாதுகாத்து வருகிறோம். இப்பொழுது அவர்கள் உங்களிடம் வருவதற்கு விரும்புகிறார்கள். அவர்களை நீங்கள் தக்க முறையில் பாதுகாத்து, உதவி புரிவதானால், இந்தப்பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். அவ்வாறு இயலாது என்றால் இப்பொழுதே கூறி விடுங்கள். யோசித்து இப்பொழுதே முடிவான கருத்தைக் கூறி விடுங்கள்” என்றார்.

யத்ரிப் வாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, “நீங்கள் கூறியதைச் செவிமடுத்தோம்; நபிகள் பெருமானாரே! ஆண்டவனுக்கும், உங்களுக்கும் உகந்ததை நீங்களே தேர்ந்து சொல்லுங்கள்” என்றனர்.

உடனே பெருமானார் அவர்கள், திருக்குர் ஆனிலிருந்து வசனங்களை அவர்களுக்கு எடுத்துக் கூறிய பின்னர் அவர்களை நோக்கி, “ஆண்டவனுடைய உடன்பாடு இதுதான். நீங்கள் அவனை வழிபடுங்கள். அவனுடன் எதனையும், எவரையும் இணையாக்காதீர்கள். என்னுடைய உடன்பாடர்வது என்னுடைய பணிக்கு உதவி புரியுங்கள். நான் பரப்பிக் கொண்டிருக்கும் சிறந்த மார்க்கத்துக்கு இடையூறாக இருப்பவர்களின் கொடுமைகள் என்னை அணுகாதபடி காத்துக் கொள்ளுங்கள். நான் கூறுவது போல் நடந்து கொள்ளுங்கள். வறுமையிலும், செல்வத்திலும் இம்மார்க்கம் பரவுவதற்காக ஆண்டவனுடைய வழியில் உங்கள் செல்வத்தை சக்திக்கு ஏற்றவாறு செலவிடுங்கள். தீய செயல்களை விட்டு விலகி, எப்பொழுதும் நல்லனவற்றையே நாடுங்கள். மற்றவர்கள் கூறும் அவதூறுகளுக்கு அஞ்சாதீர்கள். என்னை உங்கள் குடும்பத்தில்