பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73



ஒருவராகக் கருதி எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்” என்று கூறினார்கள்.

அப்போது, “இறைவனின் தூதரே! நீங்கள் கூறியவை அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். ஒன்று எங்களுக்குத் தெரிய வேண்டும். ஆண்டவனுடைய உதவியால் உங்களுடைய பகைவர்களை எல்லாம் வென்று, உங்கள் நோக்கம் நிறைவேறிய பின், நீங்கள் எங்களை எங்கள் எதிரிகளிடம் விட்டு விட்டு, மக்காவுக்குத் திரும்பி வந்து விடுவீர்களா?” என்று வந்த தலைவர்களில் ஒருவரான அபுல் ஹைதம் என்பவர் கேட்டார்.

“அவ்வாறு ஒருக்காலும் நடவாது. நான் உங்களுடையவன். நீங்கள் என்னுடையவர்கள். நான் உயிரோடு இருப்பதும், இறப்பதும் உங்களுடன்தான்.

நீங்கள் சமாதானமாக இருப்பவர்களுடன், நானும் சமாதானமாக இருப்பேன். உங்களுடைய பகைவர்கள் எனக்கும் பகைவர்களே!” என்று பெருமானார் கூறினார்கள்.

உடனே அவர்கள் அனைவரும், பெருமானார் அவர்களின் திருக்கரத்தை நீட்டச் சொல்லி, ஒவ்வொருவராக அவர்கள் கரத்தோடு இணைத்து, “ஆண்டவனுக்கும், தங்களுக்கும் உண்மையானவர்களாய் இருப்போம்” எனப் பிரமாணம் செய்தனர்.

அதன்பின், அவர்களிலிருந்து பொறுப்பான பன்னிரு தலைவர்களைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள், இரு கோத்திரங்களிலிருந்தும் பன்னிருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும், “நீங்கள் தாம் உங்கள் மக்களின் செயல்களுக்குப் பொறுப்பாவீர்கள்!” என்று அறிவுறுத்தி அவர்களை நபி பெருமானார் அனுப்பி வைத்தார்கள்.


53. போகவும் விடவில்லை

பெருமானார் அவர்களுக்கும், மதீனாவாசிகளுக்கும் நிகழ்ந்த உரையாடல், உடன்படிக்கை ஆகியவற்றைத் தொலைவில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த மக்காவாசி ஒருவர் ஓடிப் போய் குறைஷிகளிடம் கூறினார்.