பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74



அதைக் கேட்டதும் ஆத்திரம் கொண்ட குறைஷிகள், உடன்படிக்கை செய்த மதீனா வாசிகளைப் பிடிக்க முயன்றார்கள். ஆனால், அவர்களோ மக்காவை விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டார்கள்.

மக்காவில் குறைஷிகளின் கொடுமைக்கு ஆளாகிக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு மதீனாவில் ஆதரவு இருப்பதால், தங்கள் தோழர்களை அங்கே போகும்படி பெருமானார் அவர்கள் கட்டளையிட்டார்கள். முஸ்லிம்களும் புறப்படத் தொடங்கினார்கள். குறைஷிகள் அதை அறிந்து, அவர்களைப் போக விடாமல் தடுத்தனர். அவர்கள் இருவர் மூவராகச் சேர்ந்து, மறைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். சில நாட்களுக்குள் நூறு குடும்பங்கள் வரை மதீனாவை அடைந்தன.

மக்காவில் பெருமானார் அவர்களுடன் அபூபக்கர், அலி அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் துன்பத்தினால் வருந்திக் கொண்டிருந்த வேறு சிலரும் தவிர, முஸ்லிம்கள் வேறு ஒருவரும் அங்கே இல்லை.

மக்காவில் பல வீடுகள் காலியாகக் கிடந்தன. வியாபாரம் குறைந்தது.


54. கொலை செய்யத் திட்டம்

இஸ்லாம் மதீனாவில் வேரூன்றி விடுமோ எனக் குறைஷிகளுக்கு அச்சம் உண்டாயிற்று.

பெருமானார் அவர்களும் ஒரு வேளை அங்கே போய் விடுவார்களோ என்று எண்ணி, அவர்களைப் போக விடாமல் தடுப்பது எவ்வாறு என ஆலோசிக்க, குறைஷிகளின் கூட்டம் ஒன்று நகர மண்டபத்தில் கூடியது.

கூட்டத்துக்கு ஒவ்வொரு குடும்பத்தின் தலைவரும் வந்திருந்தனர். அவர்கள் ஆளுக்கொரு யோசனை கூறினார்கள்.

பெருமானார் அவர்களின் கை, கால்களில் விலங்கிட்டு, சிறைப் படுத்த வேண்டும் என்றனர் சிலர். நாட்டை விட்டே