பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78



அப்பொழுது குகை வாயிலில் ஒரு சிலந்தி வலை பின்னியிருந்தது. புறா கூடு கட்டி, முட்டையிட்டு இருந்தது. அதைப் பார்த்ததும் அவர்கள் அங்கே இருக்க முடியாது என்று கருதி குறைஷிகள் திரும்பி விட்டார்கள்.

பெருமானார் அவர்களும், அபூபக்கர் அவர்களும் மூன்று நாட்கள் குகையில் தங்கி இருந்தார்கள்.

அபூபக்கர் அவர்கள் வீட்டிலிருந்து மூன்று நாட்களும் இரவு வேளைகளில் அவர்களுக்கு உணவு வந்து கொண்டிருந்தது.


58. கொலையாளியின் மனமாற்றம்

பெருமானார் அவர்களும் அபூபக்கர் அவர்களும் நான்காம் நாள் குகையை விட்டுப் புறப்பட்டார்கள்.

ஒரு நாள் இரவும் பகலும் பயணம் செய்தார்கள். மறுநாளும் பயணத்தை மேற்கொண்டார்கள். பகலில் வெப்பம் அதிகமாயிருந்ததனால், அபூபக்கர் அவர்கள் சிறிது நேரம் நிழல் உள்ள பகுதியில் பெருமானார் அவர்களை இளைப்பாறச் செய்து, ஆடு மேய்ப்பவரிடம் சென்று, பால் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து பெருமானார் அவர்களைப் பருகச் செய்து, தாமும் பருகினார்கள். அங்கே உணவு எதுவும் கிடைக்கவில்லை.

மீண்டும் பயணமானார்கள். அப்பொழுது மக்காவிலிருந்து தேடி வந்த ஸூராக்கா என்பவர் தூரத்திலிருந்தே அவர்களைக் கண்டுவிட்டார். அவர்களை நெருங்கத் தம் குதிரையை வேகமாக விரட்டினார். குதிரை கால் இடறிக் கீழே விழுந்தது.

பெருமானார் அவர்களைத் தாக்குவதற்கு எண்ணி, நாட்டு வழக்கப்படி அம்புக் குறி போட்டுப் பார்த்தார். “வேண்டாம்” என எதிர்க் குறியே வந்தது ஆயினும், நூறு ஒட்டகங்கள் கிடைக்குமே என்ற ஆசை அவரைத் தூண்டியது. மறுபடியும் குதிரை மீது ஏறிச் சிறிது தூரம் சென்றதும், மீண்டும் குதிரையின் கால்கள் பூமிக்குள் பதிந்து விட்டன. மறுபடியும் அம்புக் குறி போட்டுப் பார்த்தார். வேண்டாம் என்றே மீண்டும் வந்தது. அதனால் அவருக்குக்