பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

◯|

ஒரு சோலை பொதுவுடைமை ஆகிறது




இருள் நரைத்த பாலைவனம்.

அதில் ஏர்க்கால்களையே ஆரக்கால்களாய்ப் பெற்ற ஒரு சந்திரச் சக்கரம், அது நடந்தவழியெல்லாம் அறிவின் நடவு, ஆம்-பெருமானார் உதயமானார்.

அவர்வேரும் பயன்படும் மருந்து மரம்.

அந்த மருந்து மரத்தின் இனிய விதைக்குக் கருப்பை தந்தவர்; தனது வாய்க்கால் நடையால் அதன் பூப்புக்குத் தமிழ்த் தோட்டத்தில் தன்னையே பாய்ச்சியவர்;

தானம் வாங்கிய பாவலரல்லர்; தானம் செய்தவர் -அவதானம் செய்தவர். சதாவதானி செய்கு தம்பிப் பெரும்பாவலர்.

பாவலரின் பாக்குடலை விளக்கம் செய்தவை அவர் பெற்ற அசை மலர்களே ; தசை மலர்களல்ல.