பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 பர்தாவிற்குள் முடக்க அவர் பூக்கள் பெண் பால் அல்ல.

மணமே மகரந்தமாகும் மனோகர மலர்கள் அவை.

◯ ◯

எழுத்துக்களின் மேல் நீச்சலடிக்க மட்டுமே அறிந்திருந்த என்னைப் போன்றோர் முக்குளிக்கவும் மூழ்கி முத்தெடுக்கவும் பயிற்சி பெற்றது. பாவலரின் பாக்கடலில்தான்,

பாவலரின் மான்மியத்தை நான்கு சுவர்களுக்குள் புதைத்து வைத்துக்கொண்டு புதையல் புதையல் என்று காத்துக்கிடக்கும் பூதங்களிடமிருந்து அந்நூல் -

--திக்குகளே எல்லாம் முட்டி மோதி எதிரொலியால் வானைத்திறக்கும்: வல்லமை பெற்ற அந்நூல்

விடுபட்டுத் தமிழ்ப் பொதுவில் உலாவரும், கம்பீரமான காட்சியைக் கானும் பெருவிருப்பினால் நான்,

-பாவலர் பிறந்த திருக் கோட்டாற்றிலேயே

அவன் வாழ்ந்திருந்த காலத்திலேயே

பிறந்து அழும் பேறு பெற்ற நான்

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம். அச்சேறாமல் கிடக்கும் அவரது நூல்கள் பற்றிக் குமுறி வெடித்து விடுவதுண்டு.