பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளையான்குடிக் கல்லூரி அண்மையில் வெளியிட்ட சீறா ஆய்வுத்திரட்டில் இடம்பெற்ற எனது கட்டுரை ஒன்றிலும் பாவலரின் மான்மியப்பாடல் ஒன்றைத் தொட்டுக்காட்டி

அந்தநூல் அச்சேறி நூல்வடிவு பெறாதது நல்ல தமிழின் பொல்லாத ஊழன்றி வேறென்ன? என்று குறிப்பிட்டிருந்தேன்.

பலகண்கள் மேய்ந்து ஓய்ந்த இந்தவரிகளுக்கிடையே

அல்ல, அல்ல இந்த வரிகளின் எழுத்துக்களுக்கு ஊடே படிக்கின்ற வல்லமையை ஒருவர் மட்டுமே பெற்றிருந்தார்.

வரதட்சணை கொடுக்க முடியாமல் இளமையைப் பலிகொடுத்துக் கொண்டிருந்த பெண்ணைப் போன்ற இந்த நூலே மணம் பெறச்செய்யவும் வாழ்வு பெறச் செய்யவும் வேண்டுமென்று ஒருவருடைய மனச்சாட்சிக்குத்தான் சூடு பிறந்தது.

அவர்உத்தமபாளையம் என்ற தனது ஊரின் பெயரைக் காரணப் பெயராக்கிக் கொண்டிருக்கும் ஜனாப் கே. சி. முகமது இசுமாயில் என்னும் நாடறிந்த பெருமகனார். ‘மான்மியத்தை அச்சிட்டு இலவசமாக வினியோகிக்க விரும்புகிறேன். அச்சிடும் பொறுப்பை ஏற்றுக்கொள்வாயா? என்று எடுத்த எடுப்பிலேயே எனக் கெழுதி என்ணேத் திக்கு முக்காடச் செய்தது ஒரு செய்தியல்ல!


இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு.



xvii