பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரைகற்கள் என்று நம்பி பாவலரின் மான்மியப் பொன்னை இவ்வளவு காலமும் கூழாங்கற்களில் உரைத்துப் பொழுதை வீணடித்தோம். தற்செயலாகக் கைவல்ல தட்டார்கை உரைகல்லில் ஒரு வீச்சுப்பட்டது;

இதோ ஆபரணத்தை நீங்கள் அணிந்து மகிழ்கிறீர்கள்.

◯ ◯

தகுதிவாய்ந்த செவிகளுக்காகவும் விழிகளுக்காகவும் எனது வாயும் கையும் முறையிட்டு முறையிட்டு ஒய்ந்து போய்க் கொண்டிருந்தபோது திடீரென்று உத்தமபாளையத்திலிருந்து திறந்து நீண்ட ஒர் அமுதசுரபி அன்னப் பருக்கைகளை யல்ல அச்சுப் பருக்கைகளை வழங்குகிறது. இலக்கியக் காயசண்டிகைகள் ஏப்பம் விடுகிறார்கள்; எங்கள் கிருபைச் சமுதாயத்தின் பெருந்தன உதயகுமரர்களோ முக்காடு போட்டுக் கொள்கிறார்கள்.

◯ ◯

புலவரெனப் பெயர்சொல்லி வெறும் தானியம்பாடி களாகவும் மானியம்பாடிகளாகவும் வாழ்ந்தவர் நடுவே நாயக மான்மியம் பாடிய பாவலனே வாணியம் பாடிக் கவிஞன்.

xix