பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 இந்நூலுக்கொரு அருமையான முன்னுரை எழுதியளித்தமைக்கோ நன்றிதெரிவிப்பது, விழிகளைப் பாதுகாக்கும் காரணத்துக்காக இமைகளுக்கு நன்றி தெரிவிப்பது போன்றதாகும்.

இந்நூல் வெளியீட்டு முயற்சியில் அவ்வப்போது எனக்கேற்பட்ட சிக்கல்களையும் தொல்லைகளையும் மகிழ்ச்சிகரமாக என்னோடு பகிர்ந்துகொண்டு அவற்றைக் களையும் வழிவகைகாணப் பேருதவியாயிருந்த அருமைத் தம்பி சின்னமனூர் தி.மு.அப்துல்காதர் எம்.ஏ., அழகிய முகப்போவியம் ஒன்றினை ஆர்வமோடு தந்துதவிய இனிய நண்பர் திரு.நை.மு. இக்பால் இந்தக் கொச்சகப் பாடல்களை அச்சகப் பாடல்களை மிகக்குறுகிய காலத்தில் சிறப்பாக நூல்வடிவு பெறச்செய்த சிவகங்கை அகரம் அச்சகத்தார் ஆகியோர்க்குக் கடப்பாடுடையேன். இருளில் விடப்பட்டுள்ள இத்தகு நல்லிலக்கியச் செல்வங்கள் வெளிச்சப்படுத்தப்பட்டுத் தமிழின் பெருமைக்குப் பெருமை சேர்க்கக் 'கூராதோ வான்கருணை; கூர்ந்து வந்து வாய்மை தர்ராதோ எம்மிறையோன் சார்பு:

363, புதுங்கர்,

நாஞ்சில் ஆ. ஆரி
 

வாணியம்பாடி-2 24.3.1976.xxii