பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




4

செங்கதிரும் வெண்மதியும்
சேரஇரு கைத்தலத்தில்
தங்கிவைத்துப் பைம்பொன்நிதி
தந்திறைமை சந்தாலும்
துங்கமிகு சாந்திநலம்
தோய்ந்தபரி சுத்தநெறி
எங்கள்நிலை’ என்றுரைத்த
திப்புவியு மொப்பாதோ

ஏந்தல்நபி நாயகமே
இப்புவியு மொப்பாதோ!

5

பள்ளியிடைப் போந்ததில்லை
பாரகலை கற்றதில்லை
தெள்ளியவிஞ் ஞானவியல்
சேர்ந்திருந்து தேர்ந்ததில்லை
ஒள்ளியமெய்ப் போதநலம்
உற்றதத்து வத்தொகுதி
அள்ளியநல் லாய்வுடைமைக்
காரே வியவாதார்

அநாதிநபி நாயகமே
ஆரே வியவாதார்!

6

வாய்ந்தமன சுத்திசெய்தல்
மாடாடு பால்கறத்தல்
ஒய்ந்தகந்தை தோய்த்தல்தைத்தல்
ஊராருக் கேவல்செய்தல்
தேய்ந்தசெருப் பொக்கிடுதல்
தீமூட்டல் அட்டல்வெட்டல்
ஏய்ந்ததொழி லாதிபண்ணும்
இச்சைநிலை நச்சேமோ

இன்பநபி நாயகமே
இச்சைநிலை நச்சேமோ!