பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது13

சித்தமுற நும்தலையில்
சேர்ந்தகுப்பை அத்தனையும்
நித்தநித்தம் போட்டுவந்த
நீசனையு மோரிருநாள்
அத்தலத்தில் காணாமல்
ஆய்ந்தவன்நோய்க் கங்கடுத்து
மெத்தமெத்த உள்ளுடைந்த
மேன்மைநலம் பேணேமோ

வேதநபி நாயகமே
மேன்மைநலம் பேணேமோ!

14

உற்றபெரு நண்பரிடை
ஒகைசெய்பற் கொம்பிரண்டில்
'குற்றமுற்ற தென்றனக்குக்
கொள்கமற்ற' தென்றுரைக்கச்
சொற்றஉரைக் குட்டுணுக்கிச்
சோர' நண்புக் கன்புசெயல்
நற்றவ மென் றோதிநின்ற
ஞாயநிலை ஆயேமோ

நாடுநபி நாயகமே
ஞாயநிலை ஆயேமோ!

15

வஞ்சமற்ற நெஞ்சமொடு
வல்லவனைக் கஃபாவில்
தஞ்சமென நின்றிறைஞ்சித்
தாழ்பொழுதில் உம்கழுத்தில்
மிஞ்சுதுகி லிட்டிறுக்கி
வேதனைசெய் வீண்னையும்
'அஞ்சலெனக் காத்தளித்த
அன்புடைமை என்னேயோ

ஆதிநபி நாயகமே
அன்புடைமை என்னேயோ!

6