பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


19

காட்டுமரச் சூழலிடைக்
கண்துயிலக் கண்டொருவன்
வீட்டும்உடை வாள்கொண்டு
வெட்டமுனைந் துன்னேஇனி
மீட்டும்இறை யாவ'னென
விள்ள அல்லாஹ்” என்னஅஞ்சிப்
போட்டபடை கொண்டுதவும்
புத்திநலம் பேனேமோ

போதநபி நாயகமே
புத்திநலம் பேனேமோ!

20

குற்ற மனத்தொருத்தி
கூர்ந்தியற்றும் வல்வினைக்காய்
உற்ற சிபாரிசுகொண்
டோடிவந்த நட்பினிடைப்
பெற்ற மகவெனினும்
பேதமுறு நீதிமுறை
பற்றல் இழுக்கெ’ண்முன்
பன்னியதும் உன்னேமோ

பரமநபி நாயகமே
பன்னியதும் உன்னேமோ!

2I

கொண்டபெரு நள்ளிருளில்
கூண்டெழுந்து கோறவெனக்
கண்டபுற வாயிலிடைக்
காத்திருந்த காதலர்த்ம்
'பண்டமெடுத் தவ்வவர்கள்
பாலளிக்க' என்றுரைத்து
மண்டடவி னோடகன்ற
வாகைநிலை தேரேமோ

வண்மைநபி நாயகமே
வாகைநிலை தேரேமோ!

8