பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது22

மக்கநகர் விட்டெழுந்து
வாய்ந்ததிரு மாமதினம்
புக்கவிரைந் தேகையில்பின்
புந்தியற்றுப் போந்தொளித்துத்
தொக்ககொலை மும்முறையும்
சூழ்ந்தியற்றப் பாய்ந்தவனேத்
தக்கபடிக் காத்தளித்த
தட்புடைமை என்னேயோ

சாதிநபி நாயகமே
தட்புடைமை என்னேயோ!

23

மல்லுடைய வெஞ்சமரில்
வந்தெதிர்ந்த வஞ்சகர்தம்
கல்லுடைய கைக்கவணுல்
காய்ந்தெறிந்து வாய்ந்தமுகப்
பல்லுடையக் கோறல்செய்த
பான்மைகண்டும் தீமையிலாச்
சொல்லுடைய நற்கருணை
தோய்ந்துநின்ற தாய்ந்தேமே

சுத்தநபி நாயகமே
தோய்ந்துநின்ற தாய்ந்தேமே!

24

பொல்லாக் கொடும்போரில்
புக்கிறந்த தந்தையங்கம்
எல்லாம் அரிந்துபுனைந்
தீரவெடுத் தங்கைபற்றிப்
பல்லாற் கடித்திழுத்தப்
பாலுமிழ்ந்த பாதகிக்கும்
நல்லா தரவளித்த
நட்புடைமை கண்டேமே

நாதநபி நாயகமே
நட்புடைமை கண்டேமே!

9