பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

மாண்டசவம் ஒன்றெடுத்து
வத்திடக்கண் டங்கெழும்பி
வேண்டமரி யாதைசெய
வீற்றிருந்த நண்பர்' இவர்
தீண்டரிய காபிர்’ எனச்
செப்ப அவர் உள்ளுமுயிர்
கூண்டதுண்ட்டேன் றோதியதும்
கொள்கைநலம் மேலேயோ

கொற்றநபி நாயகமே
கொள்கைநலம் மேலேயோ!

26

அங்கசுத்தி முற்றும்முறை
பற்றியற்றி வெற்றியொடு
துங்கமிகும் ஒர்வீரர்
தூயதொழு கைப்புறத்துத்
தங்கஅவர் தம்குறையைத்
தாமேஓர்த் துப்புநெறி
பங்கமறக் காட்டுவித்த
பாரமதி தேரேமோ

பக்தநபி நாயகமே
பாரமதி தேரேமோ!

27

திராப் பெரும்பகையுள்
தீமைபல செய்திளைத்தோன்
நேராய் வரப்புரத் துன்
நீள்மனைவாப் புக்கொளித்தோர்
ஆரா யினுமவர்க்கோர்
ஆபத்து மில்லை எனப்
பேரா யுரைத்துவந்த
பீடுநிலை தேடேமோ


பேசுநபி நாயகமே
பீடுநிலை தேடேமோ!

10