பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது28

வாய்ந்தபெரு நாள்வரிசை
வாங்கிநல்கத் தந்தையின்றி
ஒய்ந்தழுத ஏழைமகற்
குள்ளுடைந்து நீராட்டித்
தோய்ந்தநறும் பட்டுடுத்தித்
தூக்கியிரு தோட்டுணகொண்
டேய்ந்ததிருப் பள்ளிபுக்க
இன்னருளு மென்னேயோ

இன்பநபி நாயகமே
இன்னருளு மென்னேயோ!

29

ஏதுங் கதியின்றி
இன்னலுறும் மாக்களென்றன்
மீது கடன்சாட்டி
வேண்டுவபெற் றுய்க'என
ஓதும் அருள்மொழிதத்
துற்றஉல காண்டிருந்தெப்
போதும் புகழ்படைத்த
போதநிலை ஒதேமோ

புண்யநபி நாயகமே
போதநிலை ஒதேமோ!

30

செம்புவெள்ளி மண்முதலாச்
சேர்ந்தபல சாதனத்தில்
வம்புபெறச் செய்து தச்சன்
வைத்தஉரு அத்தனையும்
அம்புவியில் தெய்வமென
ஆக்கிமகிழ்ந் தேத்துநர்தாம்
வெம்புநர் காழ்வ'ரென
விண்டதுவுங் கண்டேமே

வேதநபி நாயகமே
விண்டதுவுங் கண்டேமே!

11