பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



31

பாரிபர்த்தா ஒத்தமனப் பண்பொழிந்த போதிலவர்
கோரியத லாக்குரிமை கொண்டுமறு மாமணத்தில்
பேரியசு தந்திரமும் பெற்றுய்ய வைத்தமுறை
சீரியத ராதலத்துச் செப்பவல்லார் யாரேயோ

திவ்யநபி நாயகமே

செப்பவல்லார் யாரேயோ!

32


பெற்றசிறு பெண்மகவைப் பேணிவளர்த் துர்ப்புறத்தே
உற்றகுழி தோண்டிஉயி ரோடுபுதைத் தோகைமிகும்
அற்றமிலா வன்கணரும் அன்பின்நிலை கண்டுணர்ச்சி
பற்றவழி காட்டுமுங்கள் பண்புடைமை போற்றேமோ

பக்தநபி நாயகமே

பண்புடைமை போற்றேமோ!

33

பெண்ணினத்தை ஆடவர்தாம் பெற்றுவக்கும் சங்கமமாய்
எண்ணிஇடர் வாரிதிக்குள் ஈர்த்தமிழ்த்த பாவமெலாம்
மண்ணிலினி இல்லை.என மாற்றிஉயர் நன்மதிப்பும்
கண்ணியமும் ஈந்தவுங்கள் காருண்யம் போற்றேமோ

காசிம்நபி நாயகமே

காருண்யம் போற்றேமோ!