இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
34
உற்றபெரும் போரினிடை ஊறுபட்டு மாண்டவர்தம் கொற்றமிகு கைமைகளில் கொண்டணைக்க நாதியின்றி அற்றமிலா வெந்துயரு ளாழ்ந்துலேந்த பல்லோரைக் குற்றமறப் பத்தினியாக் கொண்டமையுங் கேட்டோமே
கொண்டல்நபி நாயகமே கொண்டமையுங் கேட்டோமே!
35
ஆர்ந்தசுக துக்கமெலாம் ஆடவர்க்கும் பெண்டீர்க்கும் சேர்ந்தபொது’ என்றுன்னிச் செம்மையறு கைமைகளும் ஒர்ந்துமறு மாமணஞ்செய் துய்யும்நெறி காட்டி அறம் தேர்ந்தமதிப் பேறுடைமை செப்புதற்கு மேலாதே
தெய்வநபி நாயகமே செப்புதற்கு மேலாதே!
36
ஒன்றுமில்லை பெண்களுக்கிங் குற்றகுலச் சொத்துரிமை என்றுரைக்கும் வஞ்சநெஞ்ச மீடழிய ஆடவரில் நின்றுமொரு நேர்பாதி நீத்தெடுத்து நல்கியதும் நன்றுமிகு ஞாயநிலை நண்ணுரு மெண்ணுரோ நாமநபி நாயகமே நண்ணுரு மெண்ணுரோ!