பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




61

கொல்லவெனத் தேடிஒன்னர்
கூண்டகுகை வாயிவிடை
மெல்லவந்து நூற்சிலந்தி
விட்டவலே யோடுபுரு
நல்லஅடை காத்திருப்ப
நன்குணர்ந்திங் கில்லை'யெனச்
செல்லஅவண் வீற்றவுங்கள்
தெய்வீகம் போற்றேமோ

தேவநபி நாயகமே
தெய்வீகம் போற்றேமோ!

62

வாதமிடும் யூதர்குழாம்

  • வல்லவனைத் தாழுமந்தப்

போதடுத்த தென்றுரைக்கப்
போமின்னங்கள் பள்ளியினுள்
பேதமில்லை நின்றுதொழும்
பேசுவம்பின்’ என்றியம்பி
ஏதமறக் காத்தவுங்கள்
இன்னருளும் பன்னேமோ

ஈடில் நபி நாயகமே
இன்னருளும் பன்னேமோ?

63

யோகமன்று ஞானமன்று
ஆகமன்று மோனமன்று
தேகமன்று நாமமன்று
சித்தமன்று சத்தமன்று
போகமன்று சுத்தப
பூரணத்திற் பூரணமா
ஆகநின்ற ஏகமென்ற
அத்தநிலை நத்தேமோ

ஆகிர்நபி நாயகமே
அத்தநிலை நத்தேமோ!

21