பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது





64

வானுமில்லை நீருமில்லை
வாயுமில்லை தேயுமில்லை
நானுமில்லை நீயுமில்லை
நாளுமில்லை கோளுமில்லை
பானுமில்லை மீனுமில்லை
பாரமதி யோடுவெளி
தானுமில்லை ஏகமென்ற
தத்துவத்தை நத்தேமோ

தருமநபி நாயகமே
தத்துவத்தை நத்தேமோ!

65

விண்ணுமில்லை மண்ணுமில்லை
மேலுமில்லை கீழுமில்லை
பெண்ணுமில்லை ஆணுமில்லே
பேடுமில்லை மூடுமில்லை
தண்ணுமில்லை சூடுமில்லை
சார்ந்தகர ணுதிகளின்
கண்ணுமில்லை ஏகமென்ற
கத்தநிலை நத்தேமோ

கருணைநபி நாயகமே
கத்தநிலை தத்தேமோ!

66

வாழுமுங்கள் மாமனவாய்
வல்லிருளில் காக்கவெனச்
சூழுமவர்க் காதிவஹீ
சொற்றபடிக் காப்பனிங்குத்
தாழுமெதிர் இல்லைஇனி
தக்கசுக வாரிதிக்குள்
ஆழு’மெனப் போகவிட்ட
அற்புதமும் பொற்பேயோ

ஹாஷிம்நபி நாயகமே
அற்புதமும் பொற்பேயோ!


22