பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வண்டுகளே வாருங்கள்!


கோட்டற்றில் சுரந்த பாட்டாறு இஸ்லாமிய இலக்கியப் பாத்தியில் பாய்ந்த காலம் இஸ்லாமியருக்கு வருவாய்க் காலம்,

இந்த யாப்பினுள் அட்டிய நீர்’ப் பாசனத்தால் பூவனத்தில் ஒரு பொன்வசந்தம். தமிழ்க் குடலையில் மாநபியின் மகிமை மனக்கும் மலர்கள். "நபிகள் நாயக மான்மிய மஞ்சரி' கிடைத்த பூக்காலம் பொற்காலம்தான். -

மான்மியம் என்றால் பெருமை. பாவலர் இந்தப் பாடல்களால் பெருமானாரைப் பெருமைப் படுத்துகிறாரா? இறைவனலேயே பெருமைப்படுத்தப் பட்டவரை மனித நாவா மகிமைப் படுத்திவிடும்? கோடானு கோடி மறையாலும் வருணிக்கமுடியாத கருணை வடிவை' எச்சில் துரிகைய சித்தரித்துக் காட்டிவிடும்? இல்லை; வானவராலும் மற்ற தூதராலும் புகழப்பட்டவரைப் புகழ்வதால் - அந்தப் புனிதப் புகழ் மணத்தால் - தம் நாவையும் புண்ணியப் பூவாக இனம் காட்டப் பாவலருக்கு எழுந்த ஆசையே இந்தப் பாடல்களின் பிறப்புக்குக் காரணம்.

நீரில் நின்று நா செய்த தவமே வரமாகிவிடுகிறது. நூறுபூக்களுக்கு மேல் மலர்கின்றன. உடல் உள்ளம்

iii