பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


§6

73

புங்கமழை துரவியும்மைப் போந்தடர்ந்த புல்லர்.சமர்க் கங்கஅரண் கட்டிஇகன் ருர்ப்பரித்த அன்பர்குழாம் ப்ங்கமற்க் கண்டவெற்றி பார்த்துமசை வின்றி.அருள் பொங்கவினை மங்கநின்ற பூராயம் ஒரேமோ

புனிதநபி நாயகமே பூராயம் ஒரேமோ!

74.

வஞ்சத்தால் கொல்லவென வந்தஒரு பாதகிதான் நஞ்சத்தால் செய்தஉண்டி நல்கஉண்ட நற்ருேழர் துஞ்சத்தான் சூழ்துயரில் தோய்ந்தமிழ்ந்தும் அன்னவளை விஞ்சத்தான் காத்தளித்த மெய்யன்பு பொய்யேயோ விந்தைநபி நாயகமே மெய்யன்பு பொய்யேயோ!

75

வாய்ந்தஒட்டை மீதுவர மாமதினத் தோரெவரும் பாய்ந்தெதிர்ந்து வம்மினெங்கள் பாரமனே நும்ம தென ஆய்ந்தறிந்து நிற்குமிந்த அன்புருவத் தொட்டையதை ஏய்ந்த இட மாக்கொள்வ(து)’ என்றஉரை நன்றேயோ ஏகன்நபி நாயகமே என்றஉரை நன்றேயோ?