பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

‘ஒன்னலரோ பற்பலர்நாம் ஒரிருவர் உற்றடர்ந்தால் என்னசெய்வ தென்றழுங்க 'இல்லையில்லை யாம்மூவர் பன்னரிய ஈசனும்நம் பக்கமுளன் அஞ்சலிர்’என் றுன்னரிய வாய்மைசொற்ற ஊக்கநிலை நோக்கேமோ ஓகைநபி நாயகமே ஊக்கநிலை நோக்கேமோ!

80

'குற்றமற வேலைசெய்த கூலிகளி னங்கமிசை உற்றவிய ராறுமுனம் உள்ளபடி உள்ளதொகை சொற்றபடி எட்டுணையும் சோர்வுவரா தீந்துதவல் நற்றவ’மென் றோதுமுங்கள் ஞாயமுறை ஆயேமோ ஞாலநபி நாயகமே ஞாயமுறை ஆயேமோ!

81

பிச்சைகொள வந்தவர்தம் பீழைநிலைக் குள்ளுருகி இச்சைமலிந் தேய்ந்தசில ஈன்றிதற்கோர் கோடரிகொண் டச்சமற நித்யவிர்த்திக் காவனசெய் துய்யு‘மெனப் பச்சமுறச் சொற்றவுங்கள் பவ்வியமும் நவ்வேமோ பழமைநபி நாயகமே பவ்வியமும் நவ்வேமோ!