பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91

திந்தையின்றி வேறொன்றும் நேர்ந்துரையாப் பாவியும்பின் சிந்தைகனிந்(து) உம்அடிக்கே செய்யபுகழ் பாடிவரச் சந்தமிக்க மெய்யிலிட்ட தக்கபரி வட்டமொன்றை முந்தஅளித் தாண்டதிந்த முச்சகமு மெச்சாவோ முத்துநபி நாயகமே முச்சகமு. மெச்சாவோ!

92

தீயனபூ ஜாகில் தந்த செல்வன்இக்ரி மாஉம்மை நேயமொடு காணஎண்ணி நேர்ந்தடைந்த போதவனை ஏயஅழைத் தங்கமர்த்தி ஏற்றமுக மன்கூறி தூயசெழும் போர்வைதந்த சூழ்நிலையும் பேணேமோ சோமநபி நாயகமே சூழ்நிலையும் பேணோமோ!

93

"மன்னன்ஒலீ தீன்றெடுத்த மாமகவை நும்மகற்காப் பின்னமற ஈவம்இனிப் பேர்த்தளித்துக் காமின்’எனச் சொன்னஉரைக் குட்டுணுக்கிச் சூரஅழல் கக்குதந்தைக் கின்னமுத மானவுங்கள் ஏற்றநிலை சாற்றேமோ ஏதில்நபி நாயகமே ஏற்றநிலை சாற்றேமோ!32