பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

‘பித்தமுறு வஞ்சனெனப் பேரிட்டிப் பேயனையும் இத்தரையோர் துாற்றவிடில் இல்லைஇனித் தொல்லைஎன்றும் சுத்தமொடு வாழ்ந்திடலாம் சொல்லுக’என் றார்ப்பரித்(து)ஊர் ஒத்தடர்ந்தும் சற்றுமஞ்சா உச்சநிலை மெச்சேமோ உம்பர்நபி நாயகமே உச்சநிலை மெச்சேமோ!

98

மோசமிகு வன்காபிர் மொய்த்தடர்ந்த வல்வினையால் பாசமிகும் இஸ்லாத்தின் பாதையில்மு தன்முதலாய் யாசிறுதம் மாமனையார் இன்னுயிர்நீத் தேக‘அவர்க் காசைமிகு சொர்க்க‘மென்ற ஆர்வநிலை தேரேமோ ஆலநபி நாயகமே ஆர்வநிலை தேரேமோ!

99

காவல் சிறையிலுமைக் கண்கலங்க வைக்கஎனும் ஏவல் கொடுவந்தோர்க் 'கிப்பொழுதே நும்இறைவன் பாவம் இறந்தனன்போய்ப் பாரு’மெனப் பார்த்தவர்தாம் ஆவ லொடுமிஸ்லாத் தாயசெயல் ஆயேமோ அண்டர்நபி நாயகமே ஆயசெயல் ஆயேமோ!34