பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


காவியத் தலைவனின் நகரத்தைப் பதக்கத்தில் மணி என்பார்கள். உமறுப் புலவரும் நாவலந்தீவு நானிலத்திற்குக் கண்; அறபு நாடு கண்மணி, கண்மணிக்கு உள்ளுறை உயிர் மக்கமா நகர் என்பார்,

பாவலரோ"ஓங்கு மொளி தாங்கியுறு வித்து’ என நயமாகப் பாடுகிறார். மக்கமாநகரத்தை. எல்லாம் அங்கிருந்து தானே விளைந்தது!

"சுத்தபர வெட்டவெளி தோன்றுபொருள் அத்தனைக்கும் ஒத்த முதற் காரணமாய்' அது இருந்த தன்மையையும் எடுத்துக் காட்டுகிறார்.

புல்லர்கள் புனித நபிமீது புங்கமழை துரவிப் போந்தடர்ந்த நேரத்தில் அன்பர்குழாம் அவரைச் சுற்றி நின்று காக்கிறது. இதனை ‘அங்க அரண் கட்டி’ என அழகாகச் சொல்கிறார் பாவலர். இந்த அங்க அரண் அங்கவியல் கூறாத ஐந்தாவது அரன்.

உஹத்’ போர்க்களம். பகைவரின் தாக்குதலால் பெருமானாரின் பற்கள் உடைந்து போய் விடுகின்றன. சினம்கொண்ட தோழர்கள் பகைவர்களைச் சபிக்க வேண்டுகிறார்கள். அகிலத்திற்கெல்லாம் அருட்கொடையாக அனுப்பப்பட்டவரல்லவ அருமை நாயகம். அவர்களது திருவாயிலிருந்து இறைவா! அவர்கள் தாங்கள் செய்வது இன்னதென அறியாதிருக்கிறார்கள். அவர்களை நேர்வழி செலுத்து’ என்ற வேண்டுதல்தான் பிறக்கிறது. பாவலர் பாடுகிறார்:

v