பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா * இதுவரை வாழ்ந்து கொண்டு வருகிறோம். நிச்சயம், நமக்கு இதில் எவ்வித ஐயமும் இல்லை. எதிர்க் காற்றில் பட்டம் ஏறி பறப்பது போல, எதிர்நீச்சல் போட்டுக் கொண்டு வாழ்க்கையை சமாளித்துக்கொண்டு வருகிறோம். இதிலும் நமக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. o - காலிலே இடித்துக் கொண்ட பிறகு கீழே கிடக்கும் கல்லைப் பார்க்கிறோம். தலையிலே முட்டிக் கொண்ட பிறகு, மேலே இருக்கும் பொருளைப் பார்க்கிறோம். வலியிருக்கும் வரை அதை சபிக்கிறோம். பிறகு பயணத்தைத் தொடர்கிறோம். வாழ்க்கையில் இதுபோல எத்தனையோ சந்தர்ப்பங்கள், சம்பவங்கள்.