பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்கு நாமே உதவி

17


காலிலோ தலையிலோ இடித்துக் கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள, நாம் போதிய கவனம் செலுத்துவதில்லை. ஏதோ ஒரு நினைவில், ஏதோ ஒரு கவலையில், ஆழ்ந்து மூழ்கிக் கொண்டு அவதிப்படுகிறோம். அதுதான் நம்மை ஆட்டிப்படைத்து, அறிவுக் கண்ணை மறைத்து, அல்லாட வைத்து விடுகிறது.

இதுதான் இதமான சமயம், நம்மை நாம் அறிந்து கொள்ள, ஏனென்றால், பிறர்தான் நம்மை உயர்த்த முடியும் - உற்சாகப்படுத்த முடியும், உதவ முடியும் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த புண்ணாக்கு நம்பிக்கையை இன்றுப் புறம்தள்ளிவிட்டு, முன்னோக்கி நடக்கும் ஒரு முழு நம்பிக்கையான சக்தியை மனதில் ஏற்றிக்கொள்ள முன் வந்திருக்கிறோம்.

நம்மைப் பற்றி நாமே சிந்திக்க, ஆராய்ச்சி செய்ய, புரிந்து கொள்ள, யார் என்று தெரிந்து கொள்ள, ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டு சுறு சுறுப்பாக நிமிர்ந்து நிற்கிறோம்.

நமது எதிர்கால ஏற்றமான முன்னேற்றங்களுக்கு இதுதான் முதல் படி என்பதால் தான், இந்த நேரத்தை இதமான சமயம் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

சத்தமிட்டுக் கொண்டிருக்கும் சமுத்திரத்தில், சதா காலமும் முரட்டு அலைகள், முண்டி எழுந்து கொண்டுதான் இருக்கும். பேய்க் காற்றுகள் வாய்விட்டு அலறி பிரலாபித்துக் கொண்டுதான் இருக்கும். இந்தக்