பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நமக்கு நாமே உதவி 19 நாம் ஞானியாக வேண்டாம். நம்மை நாமே அறிந்து கொள்ள முயன்றிடுவோம். நமக்கு இப்பொழுது அதுவே போதும். அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா பல்கலைக் கடிகம் ஒன்றில், ஓர் ஆராய்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு துறையிலும் உயர்ந்து விளங்கிய 1500 திறனாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் கருத்தறிந்தபோது, ஓர் உண்மையைக் கண்டறிந்தார்கள். அதாவது, ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளே சிறப்பான திறமைகள் இருக்கின்றன. அந்த அரிய பரிசினைப் பயன்படுத்திக் கொண்டால், பிரமாதமாக வாழலாம். பிரபலமாக வாழலாம் என்பதுதான் அந்தப் பேருண்மை. குள் ளன் ஒருவன் இமயமலை உச்சியில் ஏறி நின்றாலும், அவன் குள்ளனாகத் தான் தெரிவான். உயரமான வன் கிணற்றுக் )ள்ளே நின்று கொண்டிருந்தாலும், அவன் உயரமானவன் தான். இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் நமக்குள்ளே இருக்கும் திறமையை புரிந்து கொண்டோமானால், பார்த்துக் கொள்ள வேண்டிய திறமையையும் வகுத்துக் கொள்ளமுடியும். அதற்கு மனம் வேண்டும். சோம்பேறித்தனம் கொண்டவர்கள்தான் குள்ளர்கள். அவர்களால் உயர முடியாது. முடியும் என்று நம்புபவர்கள்தான் உயரமானவர்கள். அவர்களால் நிச்சயம் உயர்ந்து காட்ட முடியும். எப்படி?