பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்கு நாமே உதவி

25


ஆமாம், அவன் தன்னையும் மாய்த்துக் கொள்கிறான். தன்னைச் சார்ந்தவர்களையும் தீர்த்து விடுகிறான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வேலை நிச்சயம் வேண்டும். கட்டாயமாக வேண்டும். உழைக்கத் தெரிந்தவனே மனிதன்.

அதனால்தான் ஒரு பழமொழி இப்படிச் சொல்லிச் செல்கிறது. ‘ஒரு மனிதனுக்கு உண்மையான நண்பர்கள் அவனுடைய பத்து விரல்களே!’

இந்த உழைப்பிற்கு ஆதாரமான விரல்களை மடக்கி வைத்துக் கொண்டு சிலர் பிச்சையெடுக்கவும், வழிப்பறி செய்யவும். ஒரு சிலர் கொலை கொள்ளை செய்யவும் முயல்கின்றார்கள் என்றால் அவர்களை முட்டாள்கள் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?

ஒருவன் செய்கின்ற அவனது வேலையை வைத்துக் கொண்டே, அவன் எப்படிப் பட்டவன் என்பதைத் தெரிந்துக் கொள்ள முடியும். முடியாதா என்ன?

வேலை என்பது ஒருவனை வெளிப்படுத்திக் காட்டும் இயல்புள்ளது. அவனது குணாதிசயங்களை பிரதிபலித்துக் காட்டுவதும் ஆகும்.

ஆகவே, தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஒரு வேலையே, அவன் எப்படிப்பட்டவன் என்பதைக்