பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நமக்கு நாமே உதவி 39 நமக்குரிய தொழில், நம்மை யாரென்று வெளிப் படுத்திக் காட்டக் கூடியது. ஆகவே, தேர்ந்தெடுக்கும் பொழுது, இது நமக்குப் பொருந்தும். இது நம்மால் முடியும். இதில் தொடர்ந்து செயலாற்ற முடியும். இதனால் நம் திறமைவளரும், பெருமை உயரும் என்பதை ஆய்ந்தறிந்து மேற் கொள்ள வேண்டும். தேர்ந்தெடுப்பதில் திறம் காட்டி விட்டால், பிறகு தெளிவான வழியும், வலிவான அறிவும் நமக்கு வந்து விடும். பிறகு சாதிப்பது கடினமான காரியமா என்ன?